Tuesday, May 24, 2011


அதி காலை த‌ந்த‌ சுக‌ம்


 
ஊர் நடுவில் அமைந்த கோவில்
எமை எல்லாம் காத்து நிற்கின்ற‌ விநாயகர்
உற்சாகம் தருகின்ற ஆலய மணி ஓசை

கொண்டை போட்ட எங்கள் வீட்டு ஆண்மகன்
கூரைகளின் மேல் சேவள் அறை கூவள் விடுகிறான்
விடிந்தது காலை தொடங்கட்டும் வேலை

விடிகின்றது காலை ஆனாலும்
என் விழிகள் மட்டும் விழிக்க மறுக்கிறது
அதிகாலையில் தூங்கும் சுகத்திற்கு ஈடாக ஏதுண்டு

முதலில் விழித்தெழுகின்ற என் அம்மா
அடுப்படியில் தாளம் போடுகிறார் அந்த சத்ததில்
அப்பா எழும்பி சுதி சேராமால் கத்துகிறார்

அப்பாவின் அதிகாலை புலம்பல்
பக்கத்து வீட்டுல விளக்கு எரியுது
இவங்கள் இன்னும் எழும்பல படிக்கிறதிற்கு

தீடீர் என்று பின் முதுகில் ஒரு இடி
துள்ளி எழுந்திருந்தேன் கொலை வெறியோடு
அது என் அம்மா அன்பான அதிகாலை வில்லி

தலை விரி கோலாமாக தலையை சொறிஞ்சபடி
வீட்டு முற்றத்தை பெருக்கி கொண்டிக்கும் அக்கா
பேய் கூட‌ பார்த்தாலே பயந்தோடும் ஒரு தோற்றம் அது

அதிகாலை விழிப்பது கொடுமை தான்
ஆனாலும் காலையில் படிப்பது ஒரு சுகம் தான்
ஒரு தன்னம்பிக்கையுடன் இன்று பாடசாலை செல்லலாம்

சாதரண குடும்பத்து தலைவன் என் அப்பா
அம்மாவை சீக்கிரம் தோட்டத்திற்கு வர சொல்லிவிட்டு
மண்வெட்டியுடன் அவர் தோட்டம் செல்கிறார்

நான் பாடசாலை செல்ல ஆயுத்தம் ஆகின்றேன்
அடுப்படியில் இருந்து வரும் முட்டை பொரியலின் வாசனை மூக்கை நுளைக்கிறது இன்னிக்கு புட்டு சாப்பாடு

அம்மா போய்ட்டு வாறேன் என்று சொல்லிட்டு
எனது துவிச்சக்கர வண்டி நோக்கி வருகிறேன்
அக்கா ஒரு பள்ளி ஆசிரியை எனக்கு முன்னே போய்விட்டார்

பாடசாலக்கு செல்லும் சாலையில்
வழியில் கண்ணில் பட்ட‌ காலை காட்சிகள்
மனதிற்கு இதமாக இருந்தது

உதயவண் உலா வர‌ ஆர‌ம்ப‌ம்
தூக்கம் கலைகின்ற‌ன‌ மலர்கள்
மரகதம் தேடும் வண்ணத்து பூச்சிகள்

எனை போல‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளும்
வெள்ளை ஆடையில் எறும்பின் வேக‌த்தோடு
ஒரு திசையை நோக்கி விரைவ‌து தனி அழகு

அதிகாலை குளிர் சேர்ந்த காற்று
மேனி த‌ழுவி செல்லும் போது
ம‌ன‌தினில் ஒரு உற்சாக‌ம் பிற‌க்கிற‌து

விநாயாக‌ர் கோவிலை க‌ட‌க்கும் போது
ஒரு கையால் கும்பிட்டு செல்வ‌து
சாமி கோவிக்காத‌ என்று சொல்லி செல்வேன்

பெரிய‌ வ‌ய‌ல் வெளி,இரு பக்கமாக‌ ப‌னை ம‌ர‌ காணிகள்
ஒரு ப‌க்கமாக‌ வீடுக‌ள், இன்னொரு ப‌க்க‌மாக‌ கோவில்
அதில் ஒரு ப‌க்க‌மாக‌ எங்க‌ள் ஊர் பெரிய‌ பாட‌சாலை

க‌திர‌வ‌ன் த‌லைக்கு மேலே வ‌ந்து விட்டான்
இறுதியாக‌ பாட‌சாலை வ‌ந்த‌டைந்தேன்
அதி காலை த‌ந்த சுக‌த்தை விட்டு வில‌க‌ ம‌ன‌ம் இல்லாம‌ல்...
***இனிய‌ அன்னைய‌ர் தின‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்***

க‌ருவ‌றை தாங்கிய‌ உயிர் உள்ள‌ ஒரு ஆல‌ய‌ம்
க‌ருவ‌றை உள்ள‌ சாமிக்கெல்ல‌ம் நீயே சாமி தாயே

அம்மா நாம் தின‌ம் தின‌ம் சொல்லும் ம‌ந்திர‌ம்
அன்பும் ப‌ண்பும் சொல்லி அது உனை ம‌னிதனாக்கும்

உல‌கில் ஒரு கோடி சொர்க்க‌ம் கொட்டி இருந்தாலும்
அம்மா கையால் உண்ணும் ஆன‌ந்த‌ம் போல் வ‌ருமா

அன்பு காட்டுவ‌து ஆளுக்கால் மாற‌லாம் ஏன் குறைய‌லாம்
பிள்ளை தாய் அன்பு ம‌ட்டும் பிரிந்தாலும் பிரியாத‌து

நீ புனிதனாக‌ வாழ‌ கோவில் போக‌ தேவை இல்லை
உன் தாய் ம‌ன‌த‌றிந்து ந‌ட‌ அது ஒன்று போதும்

உன் தின‌ம் கொண்டா ஏன் ஒரு த‌னி நாள்
தேவை இல்லை இருந்தாலும் த‌ப்பு இல்லை

அன்னைய‌ர் தின‌த்தில் ஆவ‌து இறுகிய‌ ம‌ன‌ங்க‌ள் மாறி
முதியோர் இல்ல‌ங்க‌ள் குறைந்து அன்பு ஒன்றே வாழ்வாக‌ட்டும்

அனைத்து அன்னைய‌ர்க‌ளுக்கும் என் தாய்க்கும்
என் ம‌ன‌ம் நிறைந்த‌ அன்னைய‌ர் தின‌ ந‌ல்வாழ்த்துக்க‌ள்



~இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்~

 
அறிவு பசிக்கு அன்பை விற்று விட்டோம்
அன்பு இன்று ஒரு கேளிக்கை வார்த்தை

பணத்தின் தேடலில் இழந்தது நிம்மதி
ஆடம்பரமாண வாழ்க்கை போலியான புண்ணகை

படிப்பில் நூறு புள்ளி எடுக்கும் படிக்கும் இளைஞர்கள்
சுயநல வட்டதிற்குள் ,சமூக முன்னேற்றத்தில் எடுப்பது பூச்சியம்

நவீன மாறங்களால் உலக சுருங்கி விட்டது போல் ஒரு நிழல்
தனி தனி உலகமாக வாழும் நமக்குள் இடைவெளி அதிகம்

ஆயுதம் செய்பவனின் அசைக்க முடியா மூலதனம்
ஆசிய நாடுகளில் என்றைக்கும் மாற மதவெறி, இனவெறி

மனங்களின் இறுக்கம், இயற்கையின் சீற்றம் ,அழிந்து கொண்டிருப்பது மனிதநேயம் மட்டும் அல்ல மனிதனும் தான்

மலர்ந்திட்ட தமிழ் புதுவருடம் எங்கள் ஒவ்வொருவரிலும்
மற்றவர்களை நேசிக்கும் ஒரு சிறிய மாற்றத்தை தரட்டும்

நீங்கள் ஒவொருவரும் நினைக்கும் நல் விடயங்கள்
உங்களுக்கு வெற்றியுடன் கூடிய சந்தோசம் தர

எனது நண்பர்கள்,அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும்
எனது இனிய தமிழ் புதுவருட நல் வாழ்த்துக்கள்