Friday, December 31, 2010

அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்


அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்

தோழ்விகளை முதலீடு செய்
வெற்றிகள் லாபம் ஆகும்

உறவுகளை சேர்த்து வை
பாசங்கள் வந்து சேரும்

சோகங்களை கண்ணில் இடு
கண்ணீரில் கரைந்து விடும்

சந்தோசங்களை உதட்டில் சேர்
புண்கையில் வாழ்க்கை வரமாகும்

மதங்களை அன்பில் இனை
தெய்வங்கள் உன்னிலும் தெரியும்

இயற்கையை காத்து பார்
சமநிலை உன்னிலும் வரும்

லட்சியத்தை முதலில் தேடு
தன்னம்பிக்கை உனை அழைக்கும்

வீட்டினை கடந்து வா
வாழ்க்கையை அனுபவிக்க தோன்றும்

இளமையில் தூக்கத்தை கலை
நட்பும் காதலும் சொர்க்கத்தை காட்டும்

ஒரு புண்ணைகை வீசு
ஓராயிரம் மனிதர்கள் சேரும்

எண்ணங்களில் தூய்மாய் இரு
எதிர்பாரத சந்தோசங்கள் காண்பாய்

மலர்ந்திலட்ட வருடம் எம்
அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்

உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த
புது வருட நல் வாழ்த்துக்கள்

Tuesday, December 14, 2010

தாயக கனவுகளுடன்







தீராத தாய கனவுகளுடன்
உதிரம் சொட்ட சொட்ட
உயிர் மூச்சு விடும் தருணத்திலும்
உங்களின் தாகம் தமிழீலதாயகம் சொன்னவரே


உங்கள் இளமை சுகம் திறந்து
ஊண் உறக்கம் மறந்து
கொட்டும் மழையிலும் சுடும் வெய்யிலும்
நம் நல்வாழ்விற்காய் உன் வாழ்வை துறந்தவரே


தமிழ் இனம் மொழி சமய உரிமைக்காய்
தாய் மண்ணின் விடிவுக்காய் எம்மை காத்தாய்
எமை அழிக்க வந்தவனை நீ அழித்தாய்
நாம் கை தொழும் தெய்வங்கள் மாவீரரே


நீ போராட்டத்தில் இனைந்த வேளையில்
உன் தாய் மார்பு அடித்து அழுதாள்
நீ தாய் மண் முத்தமிட்ட தருணத்தில்
உன் தாய் மாவிரர் உரையில் கருவாய் அமைந்தவரே


உயிர் கொடுப்பான் தோழன் என்ற
உண்மையான் உணர்வு உருவாகியது களங்களில்
பாசத்திற்கு உரியவர்களால் பகைவர்களால் அழிவது கண்டு
உடலை ஆயுதமாக்கி கரும்பகை காண கரிய நிறம் கொண்டவரே


உங்கள் உணர்வுகளும் வாழ்க்கையும்
உன் உறவுகள் அறிய நீ விரும்பவில்லை
உங்கள் முகத்தில் உள்ள சிரிப்பும் சினப்பில்லாத பேச்சும்
எங்களை சந்தோசப்படுத்தி எங்களின் இரக்கத்தை எதிர் பாரதவரே


உங்களின் கள வீர சாதனைகள்
உலக சாதனை பட்டியலில் இடம் பெறவில்லை
மாறாக உலக நாடுகளே உங்களை அழித்திட சதி போட்டது
துரோகிகளின் நச்சு வாயுவால் உங்களை உயிரோடு கருக்கினரே


மாவிரரே உங்களின் மனித நேய போராட்டம்
தாயை கூட கூட்டிக் கொடுக்கும் எம்மவர் துரோகத்தாலும்
உலக நாடுக்ள் கூடி உங்கள் கூட்டை கலைத்ததாலும்
உணர்வுகள் உணரப்படாமல் வெறும் உடல்களை பொசுக்கினரே


கார்த்திகை மாதம் கார்த்திகை பூ
செவிகளில் தாய கீதம், கண்களில் நீர், கைகளில் மாலை
கைகளில் தீபங்கள் உயிர் உருகும் தருணம் இது
உணர்வுக்களுடன் உன் உறவுகள் உனை கான வருகின்றோம்


கல்லறை வந்த எங்கள் கண்களில் ஏமாற்றம்
இதயம் இல்லாதவன் இதய கோவிலையும் சிதைத்துட்டான்
மதி கெட்டவரே எங்கள் உதிரத்தில் கலந்து உயிரானவரை
இறுதி தமிழன் இப் பூமி இருக்கும் வரை நினைக்கப்படும்
தமிழரின் தாகம் தமீழிழ தாயகம்

விதியை வென்றவன்



கண் இமைகள் திறந்தால்
என் இதயம் துடிப்பதே நின்று விடும்
என் ஏனில் என் முன்னால் நீ இல்லை

கண் இமைகள் மூடி பார்கிறேன் அங்கு நீ
என் நினைவுகளில் தெரிகிறாய்
இப்போது நீ துர‌ம் இல்லை இன்னும் நெருக்கமே

கண்கள் கலங்கின்றது உனை கண்ட சந்தோசத்தில்
என் கண்ணீருக்குள் மூழ்கி நீ மூச்சு திணறுவது கண்டு
என் மூச்சு காற்றையே நிறுத்தி விட்டேன்

உனை ம‌றந்தோ நினைத்தோ வாழ‌ முடிய‌வில்லை
என்னவளே விதி உனை முந்தி விட்டது
உனை வென்ற‌ விதியை நான் தோற்கடித்து விட்டேன்
 

கவிதை மலர‌


காதலித்து பார் கவிதை வரும்
இயற்கை ரசித்து பார் கவிதை வரும்
இசை கேட்டு பார் கவிதை வரும்
தனிமையில் இருந்து பார் கவிதை வரும்
உலகததை ரசித்து பார் கவிதை வரும்
உல‌க‌தை வெறுத்து பார் க‌விதை வ‌ரும்
தோழ்விகள் கண்டு பார் கவிதை வரும்
வெற்றியில் களித்து பார் கவிதை வரும்
கடவுளை ஆராதித்து பார் கவிதை வரும்
கடவுளை ஆராய்ந்து பார் கவிதை வரும்
இள‌மை ர‌சித்து பார் க‌விதை வ‌ரும்
முதுமையை மதித்து பார் க‌விதை வ‌ரும்
உண‌மையை உண‌ர்ந்து பார் க‌விதை வ‌ரும்
பொய்மை விர‌ட்டி பார் க‌விதை வ‌ரும்
உற‌வுக‌ளை விரும்பி பார் க‌விதை வ‌ரும்
உற‌வுகளை இழ‌ந்த பின் பார் க‌விதை வ‌ரும்
நீதியாய் ந‌ட‌ந்து பார் க‌விதை வரும்
அநீதியை க‌ட‌ந்து பார் க‌விதை வ‌ரும்
நீ க‌விதையை ர‌சித்து பார் க‌விதை வ‌ரும்

கண்களில் விழுந்து என்னங்களில் மலர்வது கவிதை
உன் கண்களை திறந்து உன் என்னங்களிற்கு வழி விடு
உன்னில் இருந்து தினம் தினம் கோடி  கவி மலர் பூக்கும்

உலக திரை


தாயில் சிறந்த கோவில் இல்லை
முதியோர் இல்லங்கள் மூலைக்கு ஒவ்வொன்று

குழந்தையும் தெய்வ‌மும் ஒன்று
குழ‌ந்தைக‌ள் குப்பை தொட்டியில் தெய்வ‌ம் கோவிலில்

கூடி வாழ்ந்தால் கோடி ந‌ன்மை
ம‌ர‌ண‌ செய்தி கேட்டும் உற‌வுக‌ள் காண கிடைப்ப‌தில்லை

சிரித்து வாழ் பிற‌ர் சிரிக்க‌ வாழ‌தே
ந‌கைச்சுவை பார்த்து சிரிக்க‌ முய‌ற்ச்சி ந‌ட‌க்கிற‌து

உழைத்து வாழ் பிற‌ர் உழைப்பில் வாழதே
வெளியால் சொல்லாதிர்க‌ள் ப‌யித்திய‌ம் என்பார்க‌ள்

வாழ்வென்றால் போராடும் போர்க‌ளமே
உயிர் கொள்ளும் போராட்ட‌ம் உல‌க‌ நாடுக‌ள் ச‌ங்கூத‌ல்

ந‌ட்பை கூட‌ க‌ற்பை போல‌ என்னுவேன்
வெறும் க‌விதைக‌ளில் ம‌ட்டும் உண்மை ந‌ட்பு வாழ்கிற‌து

ஆண் என்ன‌ பெண் என்ன‌ எல்லாம் ஓரின‌மே
ஆம் ஆண் பெண் வித்தியாச‌ம் சொன்னால் ம‌ட்டுமே

காத‌ல் இல்லாத‌து ஒரு வாழ்க்கை ஆகுமா
காத‌ல் போதும் என்று க‌ல்யாணம் வேண்டாம்

க‌ல்யாணம் ஆயிர‌ம் கால‌த்து ப‌யிர‌ம்மா
விவாக‌ர‌த்து வ‌ழ‌ங்க‌ நீதிம‌ண்ற‌ங்க‌ள் இடைவிடா உழைப்பு

கால‌ம் க‌லிகால‌ம் ஆகி போய்ட்டு க‌ம்பீயுட்ட‌ர் க‌ட‌வுள்
தொழில் நுட்ப‌ புர‌ட்ச்சியில் ம‌னிதாபிமான‌ம் மூல‌த‌னம்

த‌மிழா த‌மிழா நாளை ந‌ம் நாடே
த‌மிழ‌ன் அழிய‌ த‌மிழன் கார‌ண‌ம் தமிழ் பேச‌ நா கூசுகிற‌து

வாழ்க்கை எனும் மேடைத‌னில் நாட‌ங்க‌ள் ஓராயிர‌ம்
உல‌க‌ திரையில் நாம் தான் மிக‌ பெரும் ந‌டிக‌ர்க‌ள்.
 

யாரும் நோக‌ அடிக்க‌ இக் க‌விதை இல்ல‌
இக் க‌விதை வ‌ரிக‌ளில் ஏதொ ஒரு இட‌த்தில் நான் கூட‌ கதாநாயகன்
நீங்க‌ள் இதில் இட‌ம் பிடிக்காம‌ல் இருக்க‌லாம்
இன்னும் ம‌னித‌ம் வாழ‌ உங்க‌ளை போன்ற‌வ‌ர்க‌ள்தான்
கார‌ண‌ம் என் கூறி ந‌ன்றி கூறுகிறேன்

என் பிரிவிலும் தொடரும் நட்பு



உறவுக‌களின் தொடக்கம் அம்மா நீ ஆனாய்
தாய்மை என்பதை முதல் உணர்ந்தாய்

என் உணர்வுகளில் நான் படைத்த உறவு நட்பு
ஆகவே நான் கூட தாய்மை உணர்கிறேன்

தாயே உன் கருவறையில் நான் வாழ்ந்தவரை
உன் மூச்சு காற்றில் நான் சுவாசித்தேன்

இதயவறையில் வைத்த என் நட்பு வாழ்கிற‌து
என் மூச்சு காற்றும் நிக்கும் வ‌ரை

அம்மா என்ற‌ உற‌வு முத‌ல் அனைத்து
உற‌வுக‌ளையும் காட்டிய‌வ‌ள் நீ

ந‌ட்பு என்ற‌ ஒரு உற‌வில் நான்
அனைத்து உற‌வுக‌ளையும் காண்கிறேன்

அம்மா இல்ல‌மால் உயிர்கள் இவ் உல‌க‌ம்
காண்ப‌த‌ற்கு சாத்திய‌ம் இல்லை

ந‌ட்பு இல்லாம‌ல் உயிர்க‌ள் எவ் உலக‌ம்
சென்றாலும் வாழ்வ‌த‌ற்கு சாத்திய‌மே இல்லை

அம்மா நீ கண்ட பிரசவ வேதனை கூட‌
நீ உன் பிள்ளை காண்பதற்கே

நீ கொண்ட அதே வேதனை காண்கிறேன்
நான் வாழ்ந்த‌ நட்பின் பிரிவுகளில்

நண்பர்கள் பிரியலாம் அனாலும்
நான் கண்ட நட்பு என் பிரிவிலும் தொடரும்
என் உயிர் நண்பர்களலின் நினைவுகளில்
 


நட்பும் காதலும்



நாங்கள் நண்பர்கள்... Smiley Smiley Smiley


இடைவெளி இல்லாதது காதல்
நகமும் சதையும் போல
இல்லையேல் வலி!

இடைவெளி கூடினாலும் நட்பு
வானும் மண்ணும் போல
இல்லையேல் போலி!

உடல்களின் சங்கமம் காதல்
பூவுக்கும் வண்டுக்குமான பகிர்வு போல
இல்லையேல் உலகுக்கு மட்டும்!

உன் மேனி ஏனியாணால் நட்பு
பூவை தாங்கி நிற்கும் காம்பு போல
இல்லையேல் பேச்சில் மட்டும்!

இன்பம் துன்பம் இரண்டும் தருவது காதல்
காதலின் சாட்ச்சி கண்ணீரை போல
இல்லையேல் ஊடல் வராது!

இன்பத்தை மட்டும் தர துடிப்பது நட்பு
நட்பின் காவல் இமைகளை போல
இல்லையேல் நம்பிக்கை வராது!

இரவின் மடியில் நிலவின் தரிசனம் காதல்
உன்னுள் என்னை நான் துலைப்பது போல
இல்லையேல் காதலின் தேடல் காணாய்!

கதிரவன் ஒளியில் காலையின் விடியல் நட்பு
ஒளியாய் இருந்து என் வாழ்க்கை வழி சொல்வது போல
இல்லையேல் நட்பில் வெற்றிகள் காணாய்!



 
நாங்கள் காதலர்கள்... Smiley Smiley Smiley

மாற்றம் தேவை


நான் தனியாக இல்லை...
என்னை நானே நெறிப்படுத்த‌...
என்னை பெற்றவர்க்ள்...
என்னுடன் பிறந்தவர்கள்...
என்னுயிர் நண்பர்கள்...
ஆண் என்றால் தனிப்பட்ட உளவியல் மாற்றங்கள்...
பெண் என்றால் தனிப்பட்ட உளவியல் மாற்றங்கள்...
நான் வளர்ந்த சுற்றாடல்...
எனது கலாச்சாரம்...
எனது சமூகம்...
இவை அனைத்தும் மீறி...
நான் எனக்காக முடிவெடுத்தால்...
இலவசமாக நிறைய பட்டங்கள்...
சுயநல வாதி...
நடத்தை கெட்டவள்‍‍‍‍‍‍‍‍‍‍-இன்னும் பல‌...
பிறருக்காக வாழ்வது ஒரு சுகம்-இதை...
உன் உதடுகள் சொன்னாலும் உன்...
உள் மனதிற்கே உண்மை புரியும்...
மனிதன் என்பவன் பூமியில் உள்ள உயிர்களில் ஒன்று...
சிரிக்க முடிந்த உயிரினம் மனிதன்-ஆனால்...
சிரிக்க மறந்த மனிதர்கள் தான் கோடி...
சிரிக்க தெரியா மற்ற உயிர்கலை பார்...
இறக்கும் வரை சந்தோசமாக வாழ்கிறது...
என் சந்தோசம் எனபது உன்னை காயப்படுத்துவது அல்ல‌...
மனிதன் வகுத்த நல்வழிகளே இன்று...
அவனுக்கு புதை குழிகள் ஆகின்றது...
சமூகம், சமயம்,கலாச்சாரம் இதன் பெயரால்...
இன்னும் எத்தனை சந்தோசங்கள் சாகடிக்கப் படுமோ?..
எனக்காக‌ வாழ்வதா...
உனக்காக வாழ்வதா...
சமூகத்திறக்காக வாழ்வதா...
குழப்பத்தில் கரைந்து கொண்டிருக்கும்...
ம‌னித‌ வாழ்வை மீட்டெடுக்க‌ ...
மாற்ற‌ம் தேவை...


Mother's DaY



பாசம் என்பது வேசம் இன்றி...
நீ..நான்.. ஏன் அனைத்து ஜிவனும்...
பெற முடிந்த‌ ஒறே இட‌ம் தாயிட‌ம் ம‌ட்டுமே...
அம்மா என்று சொல்லி பார்...
நீ க‌ட‌வுளை உண‌ர்வாய்...
நீ தூய‌வ‌ன் ஆணாய்...
பாச‌ம் என்பதின் தொட‌க்க‌ம் நீ அம்மா...
எனக்கு நோய் துன்ப‌ம் எது வந்தாலும்...
உன் ம‌டியில் என் த‌லை வைத்து...
உறங்கிய போது ம‌றைந்தது...
நீ ம‌று ஜென்மம் கண்டு...
என் ஜ‌ன‌ன‌ம் த‌ந்தாய்...
அன்று முத‌ல் இன்று வ‌ரை...
உன் பாச‌ம் ச‌லிக்க‌வில்லை...
நட்பு காத‌ல் இங்கும் நாம் தேடுவ‌து...
நீ தந்த‌ அதே அன்பு ம‌ட்டுமே...
நான் சேயான‌ போது தாயாகி...
இன்று வ‌ரை எனை காத்தாய்...
நீ சேயாகும் போது நான் தாயாகி...
உனை காப்பேன் அம்மா...

இந்த கவிதை என் தாய்க்கு நான் வாசித்து காட்டினேன்
என் தாய் கண்களில் கண்ணீர் நிறைய எனை தழுவி
முத்தம் தந்தார் நான் மீண்டும் பிறேந்தேன் இன்று
நான் அவர் கண்களில் என் மகன் என்னை பார்பான்
என்ற நம்பிக்கை இன்று பார்த்தேன்
என் தாய் இக் கவிதை எழுதி தரும் படி கேட்டு
எழுதி கொடுத்தேன் சந்தோசம் அடைந்தேன்


தாய் தந்தை அனாதை போல் விடுதிகளில் விடுவோரே
நீங்கள் விடும் அந்த நொடி நீங்கள்  மரணிக்கிறீர்.


I LOVE YOU AMMA...I LOVE YOU AMMA...I LOVE YOU AMMA... Kiss Kiss Kiss Kiss Kiss


என் பிரிவுகள் பல சில பிரிவுகள் இங்கே



தாய் மடி விட்டு தரணி கண்டேன் அன்று
என் தாயின் சுவாசம் பிரிந்தேன் Cry
தரை தவழ்ந்து பின் தரை நடந்தேன் அன்று
என் மழலை பருவம் பிரிந்தேன் Cry
தாய் தந்தாள் உணவு தன் கையால் அன்று
அச்சுவை பிரிந்தேன் இன்று Cry
வீடு விட்டு பள்ளி சென்றேன் அன்று
சுகமாக தூங்கும் தூக்கம் பிரிந்தேன் Cry
பள்ளி விட்டு கல்லூரி சென்றேன் அன்று
பள்ளியை பழகியவரை பிரிந்தேன் Cry
பிறந்த நாடு விட்டு பிற நாடு வந்தேன் அன்று
என்னை தவிர அனைத்தும் பிரிந்தேன் Cry
வாழ்கிறேன் இன்னும் உயிருடன்
இன்னும் எத்தனை பிரிகளோ Cry
வாழ்ந்து முடிப்பேன் ஒரு நாள் அன்று
என் உடல் இவ் உலகம் பிரிவேன்


நட்பினை நேசிப்ப‌தை விட‌ சுவாசிக்கின்றேன்




கடலை கடந்த அலை...
மடிய மறந்த மலர்...
மழை பொழியா வானம்...
இருளை துறந்த நிலவு...
இசையில் மயங்கா இதயம்...
நீந்த முடியா மீன்...
நிஜம் காண நிழல்...
நிறம் நீங்கி வானவில்...
வேர் ஊன்றா நிலம்...
ஒலி இன்றி மொழி...
ஒளி படா உருவம்...
கதிரவன் விழியா விடியல்...
கருவறை தோன்றா கரு...
மரணத்தை வென்ற மனிதன்...

இதில் எதுவும் சாத்தியம் இல்லை
ஏதோ ஒரு இனைப்பு இவற்றுக்குள்


இதே போல் நட்பும் அதன் தாக்கம் இன்றி
நீ இல்லை நான் இல்லை யாரும் இல்லை


நட்பு நாம் சுவாசிக்கும் மூச்சு காற்று போல‌
மூச்சு இருக்கும் வரை உயிர் இருக்கும்
உயிர் உள்ள வ‌ரை ந‌ட்பும் இருக்கும்

எனது முதல் கவிதை காதல்‍ மற்றும் நட்பு :)




நீ நேரில் வரவே இரவு பகலானது...
நீ கனவில் வரவே பகல் இரவனது...
நீ பேசும் போது ரசிக்க தோன்றும்...
நீ பேசா விட்டால் இறக்க தோன்றும்...
நீ சிரித்தால் மட்டும் சிரிக்க வேண்டும்...
நீ கண்ணீர் விட்டால் துடித்திட வேண்டும்...
நீ நேசிப்பதை நான் நேசிக்க தோன்றும்...
நீ நேசிக்காதவை நான் வெறுக்க தோன்றும்...
நீ நினைத்தால் உன் முன்னால் இருப்பேன்...
நீ நினைக்காத போதும் உன்னுடன் இருப்பேன்...
நீ இருந்தால் மட்டுமே பூமியில் வாழ்வேன்...



நீ உயிர் தரவில்லை...
நீ என் உதிரத்திலும் கலக்கவில்லை...
நீ என் உணர்வுகலை புரிகின்றாய்...
நீ தான் என் நட்பு...